பிரான்ஸில் டானியல் ஜெயந்தனின் “வயல் மாதா” என்ற கதைப் புத்தகத்தை எரித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள் சிலர். மட்டுமல்ல, இந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பதிவிட்ட மெலிஞ்சி முத்தனையும் சிலர் அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்திலும் ஜெயந்தனின் உறவினர்களிடம் தமது எதிர்ப்பை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதெல்லாம் கண்டனத்துக்குரியவை. என்பதால் என்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
வயல்மாதா என்ற கதை யதார்த்தக் கதை மட்டுமல்ல, பல பரிமாணங்களில் பேசப்பட வேண்டிய கதையும் கூட.
அதைப்பற்றி நாளை இந்தப் பக்கத்தில் பதிவிடுகிறேன்.
அதேவேளை இந்த எதிர்ப்பாளர்களின் செயற்பாட்டைப் பற்றியும் இவர்களுடைய மனநிலையைப் பற்றியும் தனியாக எழுதுகிறேன்.
ஜெயந்தனுக்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதோடு, அவருக்கு ஆதரவாக கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்துவோரும் அறிவுவூர்வமான சமூகத்தை உருவாக்க விரும்புவோரும் தங்கள் குரலை முன்வைக்க வேண்டும் என்று கேட்கிறேன்.
முட்டாள்கள் எப்போதும் கும்பலாகத் திரண்டு தங்கள் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவார்கள். அதிலொன்றே இந்த எரிப்பும். இந்த மாதிரி எத்தனையோ மூடச்செயல்களையும் முட்டாள்களையும் கண்டு, கழித்தே வந்திருக்கிறது வரலாறு.
என்ன செய்வது, நாமும் இவர்களை எதிர்கொண்டு கடந்தே ஆக வேண்டியுள்ளது. வரலாற்றின் நிர்ப்பந்தமிது.
கருணாகரன் 
