டானியல் ஜெயந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பான ‘வயல்மாதா’ நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு புத்தகத்தை வாங்கியவர்கள் , பின்னர் புத்தகத்தை படித்துவிட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். புத்தகத்திலுள்ள தலைப்புக் கதையான வயல் மாதா எனும் கதை எழுத்தாளரின் சொந்த ஊரில் இடம்பெற்ற நிஜமான நிகழ்வு எனவும், அதனை எழுதிய விதம் மற்றும் நிஜமான பெயர்களைப் பயன்படுத்தி எழுத்தாளர் இக்கதையை எழுதியுள்ளதால், இது தங்களையும் தங்கள் பின்பற்றும் மதத்தையும் புண்படுத்துவதாக நூலை எரியூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனினும் எழுத்தாளர் இதனை மறுத்துள்ளார். வயல்மாதா எனும் இக்கதை புனைவு தளத்தில் அக்கதையில் வரும் பெண்ணின் பக்கம் நிற்கிறது. மத நிறுவனத்திற்குள் இருந்து வெளியேற முயலும் பெண்ணையும் அவர் சார்ந்த ஊர் மக்களின் எததிர்வினையையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இக்கதை ஏன் ஊர் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகிறது என்பதில் இரண்டு காரணங்கள் இருக்கவேண்டும். நிஜமான நிகழ்வுகளைப் புனைவில் கையாளும்போது, எழுத்தாளன் கதாப்பாத்திரத்தை மாண்புடன் அணுக வேண்டும். இது நிகழாதபோது அது தோல்வியையே சந்திக்கும். இரண்டு, இலக்கியத்தை வெகுஜனப் படுத்தும் போது இருக்கக்கூடிய சிக்கல்கள். இப்புத்தக எரிப்பு மூலம் விடுவிக்கப்படும் எழுத்தாளர் மீதான அச்சுறுத்தல் ஏற்கத் தகுந்ததல்ல. எதிர்வினைகள் எழுத்தின் வழியே நிகழவேண்டும்
நன்றி அகழ்