வயல் மாதாவும் எரிப்பும் -Chinniah Rajeshkumar-ragavan

தனது காதலை கடவுளுக்கு மட்டும் கொடுப்பதாக சபதமிட்டு கன்னியாஸ்திரி மடம் புகல்கிறார். இது கத்தோலிக்க சமய வழக்கு. அது போலவே பாதிரியும் காதல் பண்ணவோ கல்யாணம் செய்யவோ முடியாது. இந்த சட்டத்தினால் நூற்றாண்டுகாலங்களாக பாலியல் துன்புறுத்தல்களும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் தொடர்கின்றன. ஒருவர் மனம் விரும்பி காதலை கடவுளுக்கு கொடுக்கலாம். பின்னர் மனம் மாறி திருமணமோ காதலுறவோ வைத்திருந்தால் திருச்சபை அவரை வெளியேற்றும். இன்னொரு புறம் பெற்றோர் ஒரு பிள்ளையை திருச்சபைக்கு தானம் செய்யும் வழமையும் உண்டு . […]

Continue Reading

நூலை எரிக்கும் தடித்தனம்- amarthas artist

எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் (Daniel Jeyanthan) அவர்களின் ‘வயல் மாதா’ என்னும் சிறுகதைத் தொகுதி, பிரான்ஸ் நாட்டில் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த நூலை எதிர்க்கும் வகையில், ஜெயந்தன் வசிக்கும் வீட்டின் அருகிலே சிலர் கூடிநின்று, அதனை எரிக்கும் இழிசெயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த நூல் தொடர்பிலே எதிர்ப்புணர்வையோ மாற்றுக் கருத்துகளையோ கொண்டிருப்பவர்கள், அவற்றைப் பகிரங்கமாக வெளியிட்டிருக்கலாம். நூலாசிரியருடன் கண்ணியமாக உரையாடியிருக்கலாம். நூலை எரித்த தடித்தனம் கண்டனத்திற்குரியது. அற உணர்வு, கருத்துரிமைப் பண்பு கொண்டவர்களால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத […]

Continue Reading

புலம் பெயர்ந்து வாழும் சிலரின் தடித்தனம்̀. எழுத்தாளர் சாரு நிவேதிதா

                                                                நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் நாய்களையும் அவைகளின் உயிருக்கு வாகனங்களால் ஏற்படக் கூடும் உயிராபத்தையும், அப்படி ரோட்டின் குறுக்கே பாயும் நாய்களால் மனித உயிருக்கு ஏற்படும் […]

Continue Reading

வயல் மாதா நூல் எதிர்ப்புப் பற்றி கவிஞர் கருணாகரன்

பிரான்ஸில் டானியல் ஜெயந்தனின் “வயல் மாதா” என்ற கதைப் புத்தகத்தை எரித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள் சிலர். மட்டுமல்ல, இந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பதிவிட்ட மெலிஞ்சி முத்தனையும் சிலர் அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்திலும் ஜெயந்தனின் உறவினர்களிடம் தமது எதிர்ப்பை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதெல்லாம் கண்டனத்துக்குரியவை. என்பதால் என்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். வயல்மாதா என்ற கதை யதார்த்தக் கதை மட்டுமல்ல, பல பரிமாணங்களில் பேசப்பட வேண்டிய கதையும் கூட. அதைப்பற்றி நாளை இந்தப் பக்கத்தில் பதிவிடுகிறேன். அதேவேளை […]

Continue Reading

வயல் மாதா சிறுகதைத்தொகுப்பு எரிப்பு பற்றி எழுத்தாளர் வ. ந . கிரிதரன்

பிரான்சில் டானியல் ஜெயந்தனின்  ‘வயல் மாதா’சிறுகதைத்தொகுப்பு கத்தோலிக்க மதத்தை நிந்திக்கிறது என்னும் காரணத்தைக்காட்டி  எரிக்கப்பட்டுள்ளது.  தம் கருத்துகளுக்கு, மதங்களுக்கு, மொழிகளுக்கு  எதிரான  நூல்களை எரிப்பதை ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருவதைக் காலத்துக்குக் காலம் கண்டு வருகின்றோம்.  அண்மையில் கூட போலந்தில் மதகுரு ஒருவரால் ஹாரி போட்டர் நாவல் எரிக்கப்பட்டதைப் பார்த்திருக்கின்றோம். ஐம்பதுகளில் அமெரிக்கச் செனட்டர் ஜோசப் மக்கார்தி இடதுசாரிக்கருத்துகளைச்சார்ந்த நூல்களையெல்லாம் வெளிநாடுகளிலுள்ள அமெரிக்க நூலகங்களிலிருந்து அகற்றவேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அவ்விதமான […]

Continue Reading

வயல் மாதா தொகுப்பு எதிர்ப்புக்குறித்து கவிஞர் தர்மினி

இரண்டு கிழமைகள் ஆகிறது; தன் முதலாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிட்ட காரணத்தால் ஊரார்,உறவுகள்,ஃபேஸ்புக் நட்புகள்,எழுத்தாளர்கள் இன்னும் அறிந்தவர் அறியாதவர்கள் பலராலும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன்.இதில் எத்தனைபேர் வயல் மாதா தொகுப்பைப் படித்தார்கள்? வயல் மாதா கதையை வாய்வழி அரைகுறையாகப் புரிந்துகொண்டு அல்லது எரிக்கப்பட்டது -கிழிக்கப்பட்டது-அச்சுறுத்தப்பட்டது என்பவற்றை அறிந்து கொண்டு அந்தப் பரபரப்பில் பதிவுகளை எழுதியவர்கள் பலர். இரு நுால்கள் அறிமுகமும் கலந்துரையாடலும் என்ற அறிவிப்பு பொதுவாகவே விடுக்கப்பட்டது. இலக்கிய நிகழ்வில் விரும்பியவர்கள் கலந்துகொண்டிருக்கலாம். அது தனிப்பட்ட […]

Continue Reading

வயல் மாதா தீ மூட்டி எரிப்பு கண்டனக் கணை! எழுத்தாளர் என்.கே.ரி துரைசிங்கம்

லட்சம் நூல்கள்,ஓலைச்சுவடிகள் போன்ற ஆவணங்களுடன் விசமிகளால் எரியூட்டப்பட்ட யாழ்.பொதுஜனநூலக மண்ணிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளரின் நூல் பிரான்ஸில் தீ நாக்குகள் ரசித்து ருசித்து உண்ட செய்தி இலக்கிய ஆர்வலர் என்ற வகையில் என்னை புண்படுத்தியது.நூல் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை எரித்து எதிர்வினையாற்றியது தொடர்பாக எமது உணர்வுகளை கொட்டித்தீர்த்தோம்.இந்த சம்பவத்தினால் பெருமாள் முருகனுக்கு எழுத்துலகில் பெயரை தேடிக்கொடுத்தது.பல மொழிகளிலும் அவரது நூல்கள் வெளியிடப்பட்டன.அத்துடன் விருதுகளும்,பாராட்டுகளும் பெற்றுக்கொடுத்தன. டானியல் ஜெயந்தன் என்ற எழுத்தாளரை […]

Continue Reading

கருத்தைக் கருத்தாலும் எழுத்தை எழுத்தாலும் எதிர்கொள்வதே அறம். வயல் மாதா தொகுப்புக்குறித்து உமையாழ்

டானியல் ஜெயந்தனின் வயல் மாதா தொகுப்பை இன்னும் நான் படிக்கவில்லை. முகநூல் விவாதங்களில் இருந்து புரிந்துகொண்டதுவரையில் அது கிருத்தவ நம்பிக்கைகளைக் கேலி செய்கிறது என சிலர் அந்த நூலை எரித்திருக்கிறார்கள். ஜெயந்தனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான செயலில்லை. கருத்தைக் கருத்தாலும் எழுத்தை எழுத்தாலும் எதிர்கொள்வதே அறம். ஆதலால் இந்த விடயத்தில் நாங்கள் ஜெயந்தனோடு நிற்கிறோம். ஆனாலும் எமக்குச் சொல்வதற்கு சில விடயங்கள் இருக்கிறது ; படைப்பிலக்கியத்திலோ, அதற்கு வெளியிலோ நம்பிக்கைகளைக் கேலி செய்கிற போது […]

Continue Reading

பொதுவோட்டத்துக்கு அப்பால் உள்ள சிந்தனைகளை முன்வைத்தல்… வயல் மதா தொகுப்பு எதிர்ப்புக்குறித்து

டானியல் ஜெயந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பான ‘வயல்மாதா’ நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு புத்தகத்தை வாங்கியவர்கள் , பின்னர் புத்தகத்தை படித்துவிட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். புத்தகத்திலுள்ள தலைப்புக் கதையான வயல் மாதா எனும் கதை எழுத்தாளரின் சொந்த ஊரில் இடம்பெற்ற நிஜமான நிகழ்வு எனவும், அதனை எழுதிய விதம் மற்றும் நிஜமான பெயர்களைப் பயன்படுத்தி எழுத்தாளர் இக்கதையை எழுதியுள்ளதால், இது தங்களையும் தங்கள் பின்பற்றும் மதத்தையும் புண்படுத்துவதாக நூலை எரியூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் […]

Continue Reading