வயல் மாதா சிறுகதைத்தொகுப்பு எதிர்ப்புக் குறித்து எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன்

கத்தோலிக்க அடிப்படை வாதத்திற்குள் நின்று இலக்கியம் பற்றிய புரிதல்கள் இல்லாமல் எழுத்தாளனுக்கு எதிர் நிலையில் நின்று பேசப்படும் குரல்களாகவே பல குரல்கள் அடிபட்டுப் போவதை முக நூலில் காண்கிறேன். “ இது போன்ற கருத்துகள் உங்களைப்போன்ற எழுத்தாளர்களிடமிருந்து வருகையில் எங்களைப் போன்ற  நூலை வாசிக்காத எழுத்தாளர்கள் உடனடியாக மதவாதிகளே புத்தக எரிப்புக்குக் காரணமானவர்கள் என்று கருதத் தொடங்குகின்றோம். ஆனால் இது பற்றி அன்பர்கள் சிலர் என்னுடன் தொடர்புகொண்டு கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்நூலுக்கான எதிர்ப்பை மதத்துடன் பிணைக்க முடியாதுபோல்தான் தெரிகின்றது. […]

Continue Reading

“வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகள் குறித்து எழுத்தாளர் அருண்மொழிவர்மன்

“வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகள் குறித்து எழுத்தாளர் அருண்மொழிவர்மன் “வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகளை எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என்கிற வகையிலேயே பலரும் அணுகியிருந்தார்கள்.  தற்போது, அதிலுள்ள வயல் மாதா கதை, அந்தக் கதையை எழுதிய எழுத்தாளரின் ஊரில் நடந்த விடயத்தை, அதில் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்காணக்கூடிய விதத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிகின்றது.  இந்த இடத்தில் எழுத்தாளரின் பொறுப்புணர்வு பற்றியே நாம் பேசவேண்டி இருக்கின்றது.  மானுட நேயத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அக்கறையையும் விட […]

Continue Reading

புலம் பெயர்ந்து வாழும் சிலரின் தடித்தனம்

நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் நாய்களையும் அவைகளின் உயிருக்கு வாகனங்களால் ஏற்படக் கூடும் உயிராபத்தையும், அப்படி ரோட்டின் குறுக்கே பாயும் நாய்களால் மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் பற்றி எழுதிய போது, இலங்கை மக்களை ஒரு இந்திய எழுத்தாளர் நாய்கள் என்று திட்டி விட்டார் என்று காவல்துறையில் புகார் செய்து, பொதுமக்களையும் உசுப்பி விட்டு எனக்கு உயிராபத்து ஏற்படுத்திய சில தமிழர்களைப் போல ஃப்ரான்ஸிலும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஃப்ரான்ஸில் சமீபத்தில் […]

Continue Reading

சிவப்பு நிற உதட்டுச்சாயம்

மதிய வெயில் சற்றுத் தணிந்த பின்பும் காற்று தாராளமாக வீசிக்கொண்டிருந்தது. தகர அடைப்பு “சடார் படார்” என அடித்தாடிக் கொண்டிருந்தது.  வீட்டு வளவுக்குள் காய்த்து நின்ற தென்னைகளின் ஓலைகள் ஒன்றோடு ஒன்று உரசி சிரித்துக்கொண்டு நின்றன. கோழிகள் தம் குஞ்சுகளுக்கு ஈரலிப்பான மண்ணைக் கிளறி நெளிந்து புரளும் புழுக்களை கொத்திப் பரிமாறிக்கொண்டிருந்தன. நான் விறாந்தையில் வானொலியில் சூரியன் பண்பலை நேயர் விருப்பம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆச்சி வாயில் எதோ பழைய பாடலை முணு முணுத்தபடி குசினியில் பொன்னியரிசியை […]

Continue Reading