கருத்தைக் கருத்தாலும் எழுத்தை எழுத்தாலும் எதிர்கொள்வதே அறம். வயல் மாதா தொகுப்புக்குறித்து உமையாழ்

டானியல் ஜெயந்தனின் வயல் மாதா தொகுப்பை இன்னும் நான் படிக்கவில்லை. முகநூல் விவாதங்களில் இருந்து புரிந்துகொண்டதுவரையில் அது கிருத்தவ நம்பிக்கைகளைக் கேலி செய்கிறது என சிலர் அந்த நூலை எரித்திருக்கிறார்கள். ஜெயந்தனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான செயலில்லை. கருத்தைக் கருத்தாலும் எழுத்தை எழுத்தாலும் எதிர்கொள்வதே அறம். ஆதலால் இந்த விடயத்தில் நாங்கள் ஜெயந்தனோடு நிற்கிறோம். ஆனாலும் எமக்குச் சொல்வதற்கு சில விடயங்கள் இருக்கிறது ; படைப்பிலக்கியத்திலோ, அதற்கு வெளியிலோ நம்பிக்கைகளைக் கேலி செய்கிற போது […]

Continue Reading

பொதுவோட்டத்துக்கு அப்பால் உள்ள சிந்தனைகளை முன்வைத்தல்… வயல் மதா தொகுப்பு எதிர்ப்புக்குறித்து

டானியல் ஜெயந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பான ‘வயல்மாதா’ நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு புத்தகத்தை வாங்கியவர்கள் , பின்னர் புத்தகத்தை படித்துவிட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். புத்தகத்திலுள்ள தலைப்புக் கதையான வயல் மாதா எனும் கதை எழுத்தாளரின் சொந்த ஊரில் இடம்பெற்ற நிஜமான நிகழ்வு எனவும், அதனை எழுதிய விதம் மற்றும் நிஜமான பெயர்களைப் பயன்படுத்தி எழுத்தாளர் இக்கதையை எழுதியுள்ளதால், இது தங்களையும் தங்கள் பின்பற்றும் மதத்தையும் புண்படுத்துவதாக நூலை எரியூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் […]

Continue Reading

வயல் மாதா சிறுகதைத்தொகுப்பு எதிர்ப்புக் குறித்து எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன்

கத்தோலிக்க அடிப்படை வாதத்திற்குள் நின்று இலக்கியம் பற்றிய புரிதல்கள் இல்லாமல் எழுத்தாளனுக்கு எதிர் நிலையில் நின்று பேசப்படும் குரல்களாகவே பல குரல்கள் அடிபட்டுப் போவதை முக நூலில் காண்கிறேன். “ இது போன்ற கருத்துகள் உங்களைப்போன்ற எழுத்தாளர்களிடமிருந்து வருகையில் எங்களைப் போன்ற  நூலை வாசிக்காத எழுத்தாளர்கள் உடனடியாக மதவாதிகளே புத்தக எரிப்புக்குக் காரணமானவர்கள் என்று கருதத் தொடங்குகின்றோம். ஆனால் இது பற்றி அன்பர்கள் சிலர் என்னுடன் தொடர்புகொண்டு கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்நூலுக்கான எதிர்ப்பை மதத்துடன் பிணைக்க முடியாதுபோல்தான் தெரிகின்றது. […]

Continue Reading

“வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகள் குறித்து எழுத்தாளர் அருண்மொழிவர்மன்

“வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகள் குறித்து எழுத்தாளர் அருண்மொழிவர்மன் “வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகளை எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என்கிற வகையிலேயே பலரும் அணுகியிருந்தார்கள்.  தற்போது, அதிலுள்ள வயல் மாதா கதை, அந்தக் கதையை எழுதிய எழுத்தாளரின் ஊரில் நடந்த விடயத்தை, அதில் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்காணக்கூடிய விதத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிகின்றது.  இந்த இடத்தில் எழுத்தாளரின் பொறுப்புணர்வு பற்றியே நாம் பேசவேண்டி இருக்கின்றது.  மானுட நேயத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அக்கறையையும் விட […]

Continue Reading