மல்கோவா

அறை முழுவதும் இருள் மண்டிக்கிடந்தது. நான்கு பேர் மட்டும் உயிர் வாழக்கூடிய நான்கு சுவருக்குள் ஒன்பது பேர் உயிர்வாழ்கின்றோம். சுவாசிக்கத் தேவையான பிராண வாயு துண்டிக்கப்படும் போதெல்லாம் ஓங்கி சன்னல் கதவைத்தட்டுத் திறந்து நான் உயிர் வாழக் கற்றுக்கொண்டுள்ளேன். எவருக்கும் நிரந்தரமான படுக்கை இல்லை. ஆறு பேர் படுத்தால் மூன்றுபேர் சமையலறைக்கு  எதிரே அழுக்காகிக் கிடக்கும் சோபாவில் அவரவருக்கான இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். அதிகாலை எவன் எழும்பி வேலைக்கு ஓடுவான்? அந்த இடத்தில் கொடியை நாட்டலாம் என […]

Continue Reading

சனையா இருபத்தியெட்டு

விடிவதற்குள்  டாக்ட்டர் தூக்கத்தில் இருந்து  கண்களை திறந்து விட்டார். பாதித்தூக்கத்தில் தலையணையின் அடியில் துடித்து ஓய்ந்து போன தொலைபேசி தொடு திரையை எதோ நினைப்பு வரக் கட்டிலில் கிடந்தபடி மெல்லக் கைகளைத் தலையணையின் அடியில் துளைத்து  தொலைபேசியை எடுத்தார். தொலைபேசியின் தொடு திரையில் அந்தக்குறுந்தகவலும் சில தொண்டை இறுகிபோன அழுகுரல்ப்பதிவுகளும் திரையில் அனுங்கிக்கொண்டிருந்தன. கண்களை அழுத்தித்துடைத்தபடியே குறுந்தகவல்களை எழுத்துப்பிழையின்றித் திரும்பத்திரும்ப பதட்டத்துடன் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் துரித கணேசன். சில நொடிகளின் பின்பு தெளிவாக அதை உறுதிசெய்தார். கருணைநாதனுடைய […]

Continue Reading

புறாக்கூடு

நாளை பள்ளிக்கூட விடுமுறை.  வழமையான பள்ளி விடுமுறை நாட்களை எதிர்நோக்கிய  உற்சாகம் அவனிடம் சுத்தமாக இல்லை. இனம் புரியாத சோகத்தின் ரேகை அவனது முகத்தில் படர்ந்திருந்தது. அன்று பாட நேரங்களில் பெரும் பகுதி நேரத்தை பறவைகளை வரைவதிலும், ஒட்டு வேலைகளிலும்  பொழுதைக்கழித்தான். இடை வேளை நேரமானபோது அவன் கூட்டமாகச்சேர்ந்து தன்னை நிந்தனை செய்யும் சக மாணவர்களின் கண்களில் அகப்படாமல் பள்ளி வளாகத்தில் நீண்டு கிளை பரப்பியிருந்த கத்தாப்பு மரத்தின் மீது பாய்ந்து தொங்கியும் ,கீழ் வீழ்ந்து காய்ந்து […]

Continue Reading

சிலுவைப்பாதை

உணர்வின்றிப் பாலத்தின் மேலே கிடந்த என் கால்களை மெல்ல அசைத்துப்பார்த்தேன். கால்கள் அசைந்தன. உடலைத்திருப்பி எழுந்து நிற்க எத்தனித்தேன். வலது முழங்காலில் சதை பிய்ந்து வெள்ளை நிறத்தில் கரடு முரடாக எலும்புகள். கண்கள் இருண்டு தலை சுற்றியது. மூச்சு வாங்க வீதிப்பாதுகாப்பு தூணின் மீது சாய்ந்து கண்களை மெதுவாக மூடினேன். “தம்பி இப்பயெல்லாம் நேரத்துக்கு இருட்டுது மாட்டுத்தனமா பிரண்டு போன அடையானுகள் கார் ஓடுவானுகள் பார்த்து பத்திரமா ஓடு. கெல் மட் கவனம்! என்று காலையில் வைத்தியசாலை […]

Continue Reading

கடவுள் இல்லாத இடம்

நீண்ட நேரம் சிகரெட் எதுவும் புகைக்கவில்லை. உதடுகள் காய்ந்து வெடித்துப்போவதை உணர்ந்தேன். படுத்திருந்து படித்துக்கொண்டிருந்த  மொழிபெயர்ப்பு நாவலை சோபாவிலே குப்புறப் போட்டுவிட்டு குசினியை நோக்கிச் சென்றேன். ஒரு காப்பியை அடித்துக் கோப்பையில் ஊற்றினேன். இடுப்பிலிருந்து சாரம் வழுக்கிச் செல்வதை உணர்ந்த போது நான் எதுவித பிரயத்தனமும் செய்யவில்லை. வயிற்றோடு கையை அழுத்தி மெல்லச் சாரத்தை பிடித்தபடி கதிரையில் கிடந்த குளிர் அங்கியின் பையில் இருந்து ரோத்தமென் சிகரெட் பெட்டியை உருவி எடுத்தேன். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற […]

Continue Reading

வயல் மாதா

  வளைவுகள் குட்டிப்பாலங்கள் கடந்து, நதி நீரின் சலசலப்பு. பறவைகளின் ஒலிகளூடே மின் விளக்குகளே இல்லாத  காட்டுப்பாதையில் வண்டி சென்றுகொண்டிருந்தது. வண்டியின் கணப்பிலிருந்து வெளி வந்த வெப்பம் முகத்தை எரித்தது.  “இன்னும் ரெண்டு கிலோ மீற்றரிலை எங்கட அடுத்த யாத்திரை ஸ்தலம் வந்துவிடும்” என்கிறார் சிலுவையர். வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த அய்வரும் சோம்பலுடன் கண்களை விரித்து வண்டியில் இருந்து வெளியே பார்த்தனர். வானளவு உயர்ந்த மலைகள்  ராட்சச விலங்குகள் போல நகர்ந்து கொண்டிருந்தன. யாத்திரை ஸ்தலம் நெருங்க நெருங்க […]

Continue Reading

மஞ்சப்புறா

லாச்சப்பல் ரயில் நிலையத்தின் பிரதான வாயிலின் மேற்கே செல்லும் சுதந்திர சதுக்கத்தின் சுற்று வட்டத்தில் அமைந்திருக்கும் ‘நாம் தமிழர்’ தேநீரகத்தின் முன்பாக நின்று மீண்டும் தொலைபேசியைத் திறந்து தொடு திரையை விரித்து முகவரியைச் சரிபார்த்தேன். பாதைகள் தொலைத்தொடர்புக் கம்பிகளைப் போல பச்சை ,நீலம், சிவப்பு நிறங்களில் குறுக்கும் மறுக்குமாக சிக்கலாகச் சென்றுகொண்டிருந்தன. எனக்கு எதுவும் சரியாகப்பிடிபடவில்லை. பின்னர் கூகுள் வழிகாட்டும் செயலியைத் திறந்து குறித்த முகவரியை வெட்டி அதில் பேஸ்ட் செய்தேன். சில நொடிகளில் நான் செல்ல […]

Continue Reading

சிவப்பு நிற உதட்டுச்சாயம்

மதிய வெயில் சற்றுத் தணிந்த பின்பும் காற்று தாராளமாக வீசிக்கொண்டிருந்தது. தகர அடைப்பு “சடார் படார்” என அடித்தாடிக் கொண்டிருந்தது.  வீட்டு வளவுக்குள் காய்த்து நின்ற தென்னைகளின் ஓலைகள் ஒன்றோடு ஒன்று உரசி சிரித்துக்கொண்டு நின்றன. கோழிகள் தம் குஞ்சுகளுக்கு ஈரலிப்பான மண்ணைக் கிளறி நெளிந்து புரளும் புழுக்களை கொத்திப் பரிமாறிக்கொண்டிருந்தன. நான் விறாந்தையில் வானொலியில் சூரியன் பண்பலை நேயர் விருப்பம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆச்சி வாயில் எதோ பழைய பாடலை முணு முணுத்தபடி குசினியில் பொன்னியரிசியை […]

Continue Reading