தனது காதலை கடவுளுக்கு மட்டும் கொடுப்பதாக சபதமிட்டு கன்னியாஸ்திரி மடம் புகல்கிறார். இது கத்தோலிக்க சமய வழக்கு. அது போலவே பாதிரியும் காதல் பண்ணவோ கல்யாணம் செய்யவோ முடியாது. இந்த சட்டத்தினால் நூற்றாண்டுகாலங்களாக பாலியல் துன்புறுத்தல்களும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் தொடர்கின்றன. ஒருவர் மனம் விரும்பி காதலை கடவுளுக்கு கொடுக்கலாம். பின்னர் மனம் மாறி திருமணமோ காதலுறவோ வைத்திருந்தால் திருச்சபை அவரை வெளியேற்றும். இன்னொரு புறம் பெற்றோர் ஒரு பிள்ளையை திருச்சபைக்கு தானம் செய்யும் வழமையும் உண்டு . […]
