சிவப்பு நிற உதட்டுச்சாயம்
மதிய வெயில் சற்றுத் தணிந்த பின்பும் காற்று தாராளமாக வீசிக்கொண்டிருந்தது. தகர அடைப்பு “சடார் படார்” என அடித்தாடிக் கொண்டிருந்தது. வீட்டு வளவுக்குள் காய்த்து நின்ற தென்னைகளின் ஓலைகள் ஒன்றோடு ஒன்று உரசி சிரித்துக்கொண்டு நின்றன. கோழிகள் தம் குஞ்சுகளுக்கு ஈரலிப்பான மண்ணைக் கிளறி நெளிந்து புரளும் புழுக்களை கொத்திப் பரிமாறிக்கொண்டிருந்தன. நான் விறாந்தையில் வானொலியில் சூரியன் பண்பலை நேயர் விருப்பம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆச்சி வாயில் எதோ பழைய பாடலை முணு முணுத்தபடி குசினியில் பொன்னியரிசியை […]
Continue Reading